Tamil

வைட்‌ஹார்ஸ் எமர்ஜென்சி ரிலீஃப் அண்ட் ஸபோர்ட் இன்க். (WERS) 

WERS, சிட்டி ஒப் வைட்ஹார்ஸ், விக்டோரியா (City of Whitehorse, Victoria) நகரத்தில் வசித்து, கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறவர்களுக்கு அவசர நிவாரண உதவியை வழங்குகிறது.  
எங்களின் நோக்கம், மக்கள் குறுகிய கால சிரமங்களை கடந்து செல்ல உதவுவது.   

WERS பற்றிய தகவல்

  • தனித்துவமான அமைப்பு; நன்கொடைகள் மற்றும் நிதியுதவிகளின் மூலம் செயல்படுகிறது. 
  • கவுன்சில் (council) அல்லது அரசாங்கத்தின் கீழ் செயல்படும் அமைப்பு அல்ல.
  • ஊதியம் பெறாத தன்னார்வலர்களால் மட்டுமே நடத்தப்படுகிறது.

உதவிகளில் சேர்ந்தவை:

  • உணவு மற்றும் உணவுச் செலவுச்சீட்டு (தகுதியானவர்)
  • சில கட்டணம்  உதவி (தகுதியானவர்) 
  • WERS உதவ முடியாத சந்தர்ப்பத்தில் மற்ற அமைப்புகளுக்கு பரிந்துரை செய்யப்படும், உதாரணமாக:   
  • செயின்ட் வின்சென்ட் டி பால் ( St Vincent de Paul ) 
  • தி சால்வேஷன் ஆர்மி (The Salvation Army) 
  • நிபுணர் சேவைகளுக்கு பரிந்துரை (வீடு, நிதி ஆலோசனை, முதலியன) 

தகுதி வரம்பு 

உணவு அல்லது நிதி உதவி பெறுவதற்கு, நீங்கள் கீழ்க்காணும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்: 

  1. வைட்‌ஹார்ஸ் நகரப் (City of Whitehorse) பகுதியில் வசித்திருக்க வேண்டும், மற்றும் 
  2. நிதி நெருக்கடியை அனுபவித்து வரும் சூழ்நிலை.

உங்கள் தகுதி மற்றும் தேவையின் அளவை மதிப்பிடுவதற்கு உதவும் பயனுள்ள ஆவணங்கள்: 

  • வங்கி கணக்கு விவரப் பிரதிகள் (bank statements)  
  • பில்கள் (bills) 
  • வாடகை ஒப்பந்தம் (rental agreements) 
  • சென்ட்ரலிங்க் அறிக்கை (centrelink statement) 

உதவி பெறுவது எப்படி ?

நேரம் முன்பதிவு செய்ய அவசியம் இல்லை

அலுவல் நேரம் 

  • திங்கள், புதன், வெள்ளி
  • காலை 11 மணி – மதியம் 3 மணி 
  • பொது விடுமுறைகளில் மூடப்பட்டிருக்கும் 

முகவரி – 1/27 Bank Street, Box Hill, Victoria 

தொலைபேசி – 9191 5333 

மொழிபெயர்ப்பாளர – தேவைப்படும் பட்சத்தில் ஏற்பாடு செய்யப்படும் 

வருகையை முன்னிட்டு  – பயிற்சி பெற்ற ஒரு தன்னார்வலர் உங்கள் சூழ்நிலையை  புரிந்துகொள்ள உங்களுடன் தொடர்பு கொள்வார். அதன் அடிப்படையில், எங்கள் தரப்பில் வழங்கக்கூடிய பொருத்தமான உதவிகள் நிர்ணயிக்கப்படும்.